புதுடெல்லி
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1–ந்தேதியுடன் முடிவடைகிறது.எனவே மே 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது.
இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
இதுதொடர்பான பணிகள் முடிவடைந்து விட்டதால், பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கபப்ட்டது. டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது தேர்தல் கமிஷனர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
அப்போது அவர் கூறியதாவது:-ஆந்திர, சிக்கிம் ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்காக சுமார் 9,30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மொத்தமுள்ள 81.4 கோடி வாக்களர்களில் 10 சதவீத வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள்.1952 முதல் தேர்தலில் 17.2 கோடி பேர் வக்களித்தனர்.நோட்டோ பயன்படுத்தும் முறை இந்த தேர்தலில் முதல் முறையாகஅறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நடத்தைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 9 ஆம் தேதி நாடுமுழுவதும் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. என்றார்.
மேலும் மக்களவை தேர்தல் 9 கட்டமாக நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், மே 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.
பாராளுமன்றத்துக்கு மொத்தம் 9 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். ஏப்ரல் 7-ந்தேதி தேர்தல் தொடங்கும். ஏப்ரல் 9-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 10-ந்தேதி தேதி மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவும், ஏப்ரல் 12-ந்தேதி நான்காம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 17-ந்தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.ஏப்ரல் 24-ந்தேதி ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ந்தேதி ஏழாம் கட்ட ஓட்டுப்பதிவும், மே மாதம் 7-ந்தேதி எட்டாம் கட்ட ஓட்டுப்பதிவும், மே 12-ந்தேதி ஒன்பதாம் கட்ட ஓட்டுப்அப்திவும் நடைபெறும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 24-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மார்ச் 29 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 5 ஆம் தேதி கடைசி நாள். வேட்பு மனு மீதான பரீசிலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். அதேபோல், மே 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment