Wednesday, 5 March 2014

கேரள மாநில கவர்னராக ஷீலா தீட்சித் நியமனம்



Make your own Baked Taco shells
புதுடெல்லி: கேரள மாநில கவர்னராக முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நெருக்கமானவர். 75 வயதான ஷீலா தீட்சித், இந்த முறை டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


இந்நிலையில், ஷீலா தீட்சித்தை கேரள கவர்னராக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயை ஷீலா தீட்சித் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கவர்னராக நியமிக்கப்படுவது குறித்து ஷிண்டே தெரிவித்தார். இது வரை கேரள கவர்னராக இருந்த முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் நிகில்குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு மார்ச்சில்தான் அவர் கேரள கவர்னராக பதவியேற்றார். அதற்கு முன்பு நாகலாந்து கவர்னராக பணியாற்றினார். வரும் மக்களவை தேர்தலில் அவர் பீகார் மாநிலம், அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிடலாம் என பேசப்படுகிறது.

No comments:

Post a Comment